நான் செத்த பிறகு எனது பிணத்திற்கு தடுப்பூசி போடுங்க! கொந்தளித்த அலாஸ்கா முன்னாள் கவர்னர்
உயிரோடு இருக்கும் வரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என அமெரிக்க அரசியல்வாதி Sarah Palin தெரிவித்துள்ளார்.
Phoenix நகரில் நடந்த மூன்று நாள் நிகழ்வான ‘Americafest-ல்’ குடியரசுக் கட்சி தலைவர் Sarah Palin இவ்வாறு தெரிவித்தார்.
Americafest நிகழ்வில் கலந்துக்கொண்ட 2008 குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், அலாஸ்கா மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான Sarah Palin, நான் இறந்த பிறகு எனது பிணத்திற்கு தடுப்பூசி போட அதிகாரிகளை அனுமதிப்பேன் என்று கூறினார்.
மேலும், அமெரிக்க உயர்மட்ட சுகாதார அதிகாரி டாக்டர் Anthony Fauci, பேச்சை மாற்றி மாற்றி பேசும் தலைவர் என Sarah Palin விமர்சித்தார்.
என் பிணத்திற்கு தான் கொரோனா தடுப்பூசி போட அனுமதிப்பேன், உயிரோடு இருக்கும் வரை நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன், என் குழந்தைகளுக்கும் போட அனுமதிக்க மாட்டேன் என Sarah Palin கூறியுள்ளார்.
வைரஸிடமிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம், நிபுணர்கள் மற்றும் Fauci ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.