PAN Card மோசடி: உங்கள் பெயரில் யாராவது கடன் வாங்கியிருந்தால் எப்படி அடையாளம் காண்பது?
பான் கார்டு மோசடியை கண்டறிய இந்த வழியை தெரிந்து கொள்வது அவசியம்
PAN Card மோசடி
டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தால் மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மோசடிகள், திருட்டு மற்றும் சைபர் குற்றங்கள் பரவலாக உள்ளன.
அவ்வாறு மோசடி செய்பவர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்க முகவரி, பெயர், ஆதார் மற்றும் பான் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறார்கள்.
உங்கள் PAN கார்டைப் பயன்படுத்தி யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதைச் சரிபார்ப்பதற்கு வழி உங்கள் கடன் அறிக்கையை (credit report) பார்க்க வேண்டும்.
CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark ஆகிய தளங்கள் அனைத்து கடன்களின் பதிவுகளையும் பராமரிப்பதால், தகவல்களைச் சரிபார்க்க நீங்கள் அவற்றின் வலைத்தளங்களை அணுகலாம்.
கோரிக்கையின் பேரில் அவை இலவச கடன் அறிக்கையையும் வழங்குகின்றன.
இந்த அறிக்கையில் தவறான கணக்கு விவரங்கள், அங்கீகரிக்கப்படாத கடன் விசாரணைகள், விண்ணப்பிக்கப்படாத கடன்கள், அறிமுகமில்லாத நிதி நிறுவனங்கள் போன்ற தகவல்களை சரிபார்க்க வேண்டும்.
மேலும், சான்றிதழ்களைப் பயன்படுத்தி மோசடியை கண்டறிந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கடன் வழங்குநரிடம் தெரிவித்து நீங்கள் கடன் பெறவில்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், PAN தவறாகப் பயன்படுத்தப்படுவதை அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்க உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |