தித்திக்கும் சுவையில் பனையோலை கொழுக்கட்டை.., எப்படி செய்வது?
பொதுவாக கொழுக்கட்டையை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பனையோலை கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- வெல்லம்- 1 கப்
- தேங்காய் துருவல்- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- சுக்கு பொடி- ½ ஸ்பூன்
- பனை இலைகள்- 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் கொஞ்சம் கொஞ்சமாக வெல்லம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
இதையடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள பனையோலைகளில் பிசைந்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும்.
பின்னர் இதனை ஒரு நூலினால் கட்டி இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் பனையோலை கொழுக்கட்டை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |