குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான பன்னீர் 65: ரெசிபி இதோ
பன்னீர் 65 வெளியில் மிருதுவாகவும் காரமாகவும், உள்ளே கிரீமியாகவும் மென்மையாகவும் இருக்கும்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
அட்டகாசமான சுவையில் பன்னீர் 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்னீர்- 15 துண்டு
- கெட்ச்அப் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- பூண்டு - 7 பல்
- வெங்காயம் - 1
- குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள் & பச்சை)
- காஷ்மீரி மிளகாய் விழுது - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணல் ஒன்றை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் கடுகு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் கறிவேப்பிலை சேர்த்து பிறகு காஷ்மீரி சிவப்பு மிளகாய் விழுது மற்றும் கெட்ச்அப்பில் சேர்த்து கிளறவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும். பச்சை வாசனை போனதும் வறுத்து வைத்த பன்னீரை சேர்த்து வதக்கும்.
அதை தொடர்ந்து கட்டமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறினால் சுவையான பன்னீர் 65 தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |