நாவூறும் சுவையில் பன்னீர் பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாயசத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் நாவூறும் சுவையில் பன்னீர் பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 லிட்டர்
- பன்னீர்- 200g
- சர்க்கரை- 2 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- குங்குமப்பூ- சிறிதளவு
- நெய்- சிறிதளவு
- பாதாம்- 10
- பிஸ்தா- 10
- உலர் திராட்சை- 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சவும்.
இதையடுத்து துருவிய பன்னீரை கொதிக்கின்ற பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பின்னர் இதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கி வைக்கவும்.
இதற்கடுத்து கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து பாலுடன் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நறுக்கி சேர்த்தால் போதும் சுவையான பன்னீர் பாயாசம் ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |