கோஹ்லி-சிராஜிடம் நடந்தது என்ன? ஏன் 2 முறை DRS எடுத்தோம்? ரிஷப் பாண்ட் விளக்கம்
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட், இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ் முறை எடுத்தது குறித்து பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Mohammad Siraj convinced Virat Kohli to take the review of Joe Root, but Rishabh Pant was denying. pic.twitter.com/WepEASpDWH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 13, 2021
அப்போது எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டு, அதன் பின் சிராஜ் ரிவ்யூ கேட்க்ச சொல்ல, ரிஷப் பாண்ட் வேண்டாம் என்று சொல்ல, அதன் பின் ஒரு வழியாக கோஹ்லி ரிவ்யூ கேட்க, இறுதியாக அந்த ரிவ்யூ விணாக போய்விடும்.
இதே போன்று ஜோ ரூட்டிற்கு எதிராக சிராஜ் வீசிய ஓவரில் இரண்டு முறை ரிவ்யூ வீணடிக்கப்பட்டதால், இந்திய ரசிகர்கள் கோஹ்லியை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ரிஷப் பாண்ட்டிடம் கேட்கப்பட்டது. அப்போது ரிஷப், அங்கு நடந்தவற்றை கூறாமல், தெளிவாக பதில் அளித்தார்.
அதில், நாங்கல் DRS எடுக்கும் போது, அது நிச்சயமாக ஸ்டெம்ப்பை தாக்கும் என்று தான் நினைக்கிறோம்.
ஆனால், அது டிவி ரீப்ளேயில் வித்தியாசமாக காட்டப்பட்டு, அது தோல்வியில் முடிந்துவிடுகிறது.
பெரும்பாலானா நேரங்களில் நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கொள்கிறோம். சில நேரங்களில் அது சரியாக போய் முடிந்துவிடும். சில நேரங்ங்களில் அது பல அளிக்காமல் போய்விடும். அது விளையாட்டின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்.
மேலும், இதில் ஒரு ரிவ்யூவின் போது ரிஷப் பாண்ட் ரிவ்யூ எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் கோஹ்லி அதைக் கேட்காமல் ரிவ்யூ எடுத்தார். ரிஷப் பாண்ட் பேட்டியின் போது இதைப் பற்றி கூறாமல், தெளிவாக பதில் சொல்லி நழுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.