பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு: 1 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கிய இந்தியா
பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பு
பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 26க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தியா உதவி
இந்நிலையில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியா நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
Reuters
அத்துடன் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்(8 கோடி ரூபாய்) தொகையை இந்தியா வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரழிவு நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியாவுக்கு உறுதியாக இந்தியா நிற்கிறது.
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் இந்தியா வழங்குகிறது. மேலும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |