இங்கிலாந்து மருத்துவமனைகளில் பாராசிட்டமால் போன்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு
Hospitals in England hit by shortages of common drugs: இங்கிலாந்திலுள்ள மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது.
இங்கிலாந்திலுள்ள மருத்துவமனைகளில், வலி நிவாரணிகள், இரத்தக்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும் மருந்துகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் போன்ற முக்கியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இங்கிலாந்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பலவற்றில், ஆஸ்பிரின், co-codamol என்னும் பாராசிட்டமாலும் கோடீனும் கலந்த வலி நிவாரணி, ramipril என்னும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

ஒன்பது மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கு இந்த மருந்துகளில் மூன்றில் இரண்டு கிடைப்பதில் பிரச்சினை நிலவ, கென்டிலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று மருந்துகளுக்குமே தட்டுப்பாடு நிலவுகிறது.
நாடு முழுவதும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள பார்மஸி ஊழியர்கள், சில நேரங்களில், நோயாளிகள் வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகள் அவர்களுக்கு பல வாரங்கள் கிடைக்காத நிலை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள், மருந்துகள் தட்டுப்பாடுகளால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இடையூறு ஏற்படுவதாகவும், மருத்துவமனைகளுக்கும் மருந்தாளுநர்களுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதாகவும், ஏற்ற நேரத்தில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்வது நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும் என்கிறார்கள்.
அரசு சுகாதாரத்துறையோ, மருந்துகள் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்க்க, தக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.