பிரான்ஸில் நடுவானில் பாராகிளைடருக்கும்- கழுகுக்கும் இடையே நடந்த மோதல்! என்ன நடந்தது?
கிழக்கு பிரான்சில் பறந்து கொண்டிருந்த ராஜ கழுகு (royal eagle) தாமஸ் என்ற பாரா கிளைடரை(paraglider) தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பாரா கிளைடரை தாக்கிய ராஜ கழுகு
8 வருட பாராகிளைடிங் அனுபவம் கொண்ட தாமஸ் என்ற நபர் ஆல்பஸில் உள்ள பிரபலமான பாராகிளைடிங் (paraglider) பாதையில் டென்ட் டு வில்லார்ட்(Dent du Villard) மலையை நோக்கி இரண்டு பேருடன் பறக்கும் பயணத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார்.
பயணத்தின் இடையே, 2 மீட்டர் வரை இறக்கை அகலம் கொண்ட ராஜ கழுகு ஒன்று தாமஸின் தலைக்கவசத்தில் பலமாக தாக்கி கழுத்தை காயப்படுத்தியது.
இது இனப்பெருக்க காலத்தில் தனது பகுதியைக் காப்பாற்றும் கழுகின் செயல் எனக் கருதப்படுகிறது.
13 நிமிட தாக்குதல் - அறுவை சிகிச்சை தேவை
கழுகு தனது கூர்மையான நகங்களால் 13 நிமிடங்கள் தொடர்ந்து தாக்கியது, இது தாமஸின் கைகளில் கிழி காயங்களையும் துளை காயங்களையும் ஏற்படுத்தியது.
தாக்குதலை தடுக்க முயற்சித்த மற்றொரு பாராகிளைடர் (paraglider) உதவி இருந்தபோதிலும், கழுகு தாக்குதலை தொடர்ந்து நீடித்தது.
இறுதியில் பாராகிளைடர்கள் தரையிறங்கும் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த போது தாக்குதல் நின்றது, பின்னர் கழுகு பறந்து சென்றது.
தரையிறங்கியதும் தாமஸ் காயங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது, அத்துடன் அவருக்கு கழுத்து மற்றும் கைகளில் தையல் போட வேண்டியது இருந்தது.
மேலும், தாமஸுக்கு உள் காயங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |