11 காவலர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சிறைக் கைதிகள்: நாடு ஒன்றின் சிறைச்சாலையில் பரபரப்பு
பராகுவே நாட்டில் சிறைக் கைதிகள் 11 சிறை காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் கலவரம்
பராகுவே நாட்டில் மிகப்பெரிய சிறைச்சாலையான டகும்பு சிறைச்சாலையில் திடீரென கலவரம் ஏற்பட்டது.
சுமார் நான்காயிரம் சிறைக் கைதிகள் வரை அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால் கலவரத்தை கட்டுப்படுத்த சிறைக்காவலர்கள் பெரிதும் போராடினர்.
இந்த சிறையில் சமூக விரோத கும்பல் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த திடீர் கலவரம் அரங்கேறியுள்ளது.
இதனால் சிறைச்சாலையின் தகர கூரைகள் மற்றும் வாசல் பகுதிகளுக்கு கைதிகள் தீ வைத்தனர்.
பிணைக் கைதிகளாக சிறை காவலர்கள்
சிறைக் கைதிகள் வைத்த தீயை ஒருவழியாக ராணுவத்தினர் மற்றும் காவலர்களின் உதவியுடன் அணைத்தனர்.
இதற்கிடையில் சிறைக் கைதிகள் இணைந்து 11 சிறைக் காவலர்களை தங்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 11 பிணைக் கைதிகளில் 3 பேரை மட்டும் சிறைக் கைதிகள் விடுவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |