பரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் தங்கம்! உலக சாதனை படைத்த வீரர்
ஜப்பானில் நடைபெற்றுவரும் 16 ஆவது பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான எப். 46 பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் 58.23 மீற்றர் வீசி வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த இம்முறையும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கினார்.
இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார்.
மேலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு பராலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் தங்க மெடலை பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார் தினேஷ் பிரியந்த் ஹேரத்.
இந்த போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரா ஜஜ்ஹரியா வெள்ளியையும் மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
One of the Happiest Day to all Sri Lankans ??! #Gold ?FOR SRI LANKA!!
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) August 30, 2021
Dinesh Priyan Herath Mudiyanselage breaks the world record in javelin throw F46 (67.79) and wins first ever Paralympic gold medal #SRI
At Rio 2016 he won #bronze.#LKA #SriLanka #Paralympics #Tokyo2020 pic.twitter.com/wWNNlUO1KV