பாராலிம்பிக்கில் மூன்று முறை பதக்கம் வென்ற தமிழர்! வறுமையில் வாடிய மாரியப்பன் யார்?
பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழரை பற்றி பார்க்கலாம்.
யார் இந்த தமிழர்?
தமிழக மாவட்டமான சேலம், பெரியவடகம்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கவேலு மற்றும் சரோஜா. இவர்களின் மூத்த மகன் தான் மாரியப்பன்.
இவர் 5 வயதில் பள்ளிக்கு நடந்து சென்று போது பேருந்து மோதிய விபத்தில் வலது காலின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி முற்றிலும் சேதமானது.
இதனிடையே, மாரியப்பனின் தந்தை குடும்பத்தை விட்டு சென்ற நிலையில் ஒற்றை ஆளாக காய்கறி விற்றும், கூலி வேலை செய்தும் தனது குழந்தைகளை சரோஜா கவனித்துள்ளார்.
தனது வலது காலை இழந்தாலும் மாரியப்பனுக்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் முதலில் கைப்பந்து (வாலிபால்) விளையாடி வந்தார். பின்னர், அவரது உடற்கல்வி ஆசிரியர் உயரம் தாண்டுதலில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
இவருக்கு விளையாட்டு, படிப்பு என ஒரு புறம் இருந்தாலும் தனது குடும்பத்திற்காக தினமும் செய்தி தாள்கள் போடும் வேலை செய்து வந்துள்ளார். அதோடு, விடுமுறை நாட்களில் கட்டுமான பணிகளையும் செய்து வந்துள்ளார்.
இதன்பின்னர், தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பதக்கம் வென்றார். பின்னர், 2013 -ம் ஆண்டில் பயிற்சியாளர் சத்யநாராயணனை சந்தித்து பயிற்சிகளை மேற்கொண்டார்.
2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று உலக அளவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் பெய்த கனமழையால் அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை. ஆனால், இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
தற்போது, பாரிஸ் பாராலிம்பிக்கில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதனை தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய பாரா விளையாட்டில் பதக்கங்களை வென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |