இறுதி செய்யப்பட்ட $81 பில்லியன் ஒப்பந்தம்: வார்னர் பிரதர்ஸை கையகப்படுத்திய பாரமவுண்ட்
Paramount Takeover Warner Bros Discovery: பாரமவுண்ட் நிறுவனம் சுமார் $81 பில்லியன் டொலருக்கு வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய பாரமவுண்ட்
ஸ்கை டான்ஸ்(Skydance) என்ற ஒருங்கிணைந்த நிறுவனத்தின் கீழ் பாரமவுண்ட்(Paramount) நிறுவனம் பிரபலமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Warner Bros Discovery) நிறுவனத்தை சுமார் $81 பில்லியன் டொலருக்கு வெற்றிகரமாக கையப்படுத்தியதன் மூலம் அமெரிக்காவின் இரண்டு பிரம்மாண்ட ஊடக நிறுவனங்கள் ஒரே நிர்வாக நிறுவனத்தின் கீழ் வந்துள்ளது.

அமெரிக்க ஊடக வரலாற்றில் மிகப்பெரிய இணைப்பாக கருதப்படும் இந்த நிகழ்வு, அமெரிக்கா மாகாண கூட்டமைப்பு மற்றும் ஹாலிவுட் எழுத்தாளர் சங்கத்திடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்கு , அனைத்து சட்ட தடைகளுக்கும் நீக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரம்மாண்ட நிறுவனங்களும் ஸ்கை டான்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலகின் இந்த மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனத்தை தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எலிசன்(David Ellison) கட்டுப்படுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் பாரமவுண்ட் நிறுவனத்தின் மிஷன்: இம்பாசிபிள், டாப்-கன்: மேவரிக் ஆகிய புகழ்பெற்ற திரைப்படங்களும், ஹாரி பாட்டர், பார்பி, தி டார்க் நைட் ஆகிய புகழ்பெற்ற திரைப்படங்களும் ஒரே குடையின் கீழ் வந்துள்ளது.
அத்துடன் செய்தி ஊடக நிறுவனமான CNN மற்றும் பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான HBO Max ஆகியவையும் ஒரே நிறுவனத்தின் கீழ் வந்துள்ளது.