இரகசிய காதலியைக் கைவிட்டார் புடின்... வேறொரு இரகசிய குடியிருப்பில் தங்குவதாக தகவல்
புடின் தனது இரகசிய காதலியையும் அவரது பிள்ளைகளையும் கைவிட்டதாக ஒரு தகவ்ல் வெளியாகியுள்ளது.
மோசமான பெயரால் அழைக்கப்படும் புடினுடைய காதலி
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும், தடகள வீராங்கனையான அலீனா ( Alina Kabaeva, 39) என்னும் பெண்ணுக்கும் நீண்ட காலமாக தவறான உறவு இருப்பதாக கூறப்படுகிறது. ஊடகங்கள் அந்தப் பெண்ணை, ’பாலுறவு வெறிகொண்ட தடகள வீராங்கனையான புடினுடைய இரகசிய காதலி அல்லது தவறான உறவு வைத்திருக்கும் பெண்’ என்றே விமர்சிக்கின்றன.
Image: SPUTNIK/AFP via Getty Images
இரகசிய மாளிகையில் தங்குவதாக தகவல்
ஆனால், தற்போது புடின் அலீனாவைக் கைவிட்டுவிட்டதாக சமீபத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தான் கிரெம்ளின் மாளிகையிலுள்ள, தனது அலுவலகத்தின் அருகிலுள்ள, ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதாக புடினே கூறியுள்ளார்.
இங்கு நான் பணிபுரிகிறேன், பெரும்பாலான இரவுகளை இங்கேயே செலவிடுகிறேன் என அவரே கூறியுள்ளார்.
Image: Getty Images/EyeEm
அதே குடியிருப்பில்தான் புடினும் சீன ஜனாதிபதியும் சந்தித்துக்கொண்டார்கள் என கூறப்படுகிறது. தனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக, பாதுகாப்பான அந்த குடியிருப்பில் புடின் தங்கியுள்ளார்.
ஆனால், அவர் எந்த குடியிருப்பில் தங்கியுள்ளார் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.