23 வயதில் உருவாக்கிய நிறுவனம்... ரூ 1750 கோடிக்கு விற்ற நபர்: அவரது சொத்து மதிப்பு
உயிரி தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்று, தனது வெற்றிகரமான பொறியியல் வேலையை விட்டுவிட்டு பராஸ் சோப்ரா சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
மிகச் சிறிய வயதிலேயே
இன்று, அவர் வெற்றிகரமான தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார், மேலும் சமீபத்தில் தனது SaaS என்ற நிறுவனத்தை 200 மில்லியன் டொலர்கள் தொகைக்கு விற்றுள்ளார்.
பஞ்சாபில் பிறந்த பராஸ் சோப்ரா, படிப்பில் எப்போதும் சிறந்த மாணவர்களில் ஒருவராக இருந்தார். அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே கணினிகள் அறிமுகமாகின. 13 வயதான போது, மற்ற குழந்தைகள் கணினியில் விளையாட்டுகளை விரும்ப, பராஸ் கட்டளைகளை அமைக்கத் தொடங்கினார்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் போது, அவர் அதில் நிபுணராகிவிட்டார். பின்னர் அவர் டெல்லி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயிரி தொழில்நுட்பத்தை தனது பாடமாகத் தெரிவு செய்தார்.
2008 ல், பராஸ் தங்கப் பதக்கத்துடன் தனது பட்டப்படிப்பை முடித்து, ஆஸ்பைரிங் மைண்ட்ஸில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். சுமார் ஒன்றரை வருடங்கள் வேலையில் செலவிட்ட பிறகு, பராஸ் தனக்கு ஆர்வமுள்ள பகுதிகளின் பட்டியலை உருவாக்கத் தொடங்கினார்.
200 மில்லியன் டொலர்
அதுவே Wingify என்ற நிறுவனத்தை உருவாக்க தூண்டுதலாக அமைந்தது. 23வது வயதில், தமது கனவை பராஸ் நிறைவேற்றிக்கொண்டார். ஸ்பர்ஷ் குப்தாவுடன் இணைந்து உருவாக்கிய அவர்களின் முதல் தயாரிப்பு VWO என்பதாகும்.
2020ல் டெல்லியில் நிறுவப்பட்ட Wingify-ல் தற்போது 90 நாடுகளில் 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெறுகின்றனர். மைக்ரோசாப்ட், லெனோவா மற்றும் வால்ட் டிஸ்னி போன்ற பெரு நிறுவனங்களும் Wingify-ன் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
பராஸ் சோப்ரா, தனது சுயநிதி நிறுவனமான விங்கிஃபையின் பெரும்பான்மையான பங்குகளை தனியார் பங்கு நிறுவனமான எவர்ஸ்டோனுக்கு சுமார் 200 மில்லியன் டொலர் அதாவது ரூ 1750 கோடிக்கு விற்றுள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |