தலை முதல் கால்வரை எல்லா நோய்களையும் வெளியேற்ற வேண்டுமா? இந்த ஆசனத்தை செய்து வாருங்க
பொருள்,பணம் சேர்ப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதே முக்கியமானது.
அந்த வகையில் யோகாசனமானது மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக நோய் நொடியின்றி சிறப்பாக வாழவும்,உடல்,மன வலிமையோடு இருக்கவும் தூண்டுகோலாக அமைகிறது.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் நம் உடலிலுள்ள சுவாச மண்டலம்,நரம்பு மண்டலம்,ஜீரண மண்டலம்,இரத்த ஓட்டம் மண்டலம் போன்றவை சரியாக இயங்க வேண்டும். யோகாசனத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல்வேறு ஆசனங்கள் காணப்படுகிறது.
அதிலும் உச்சி முதல் கால் வரை பயனளிக்கும் பறவையாசனம் பற்றி பார்ப்போம்.
பறவை ஆசனம்
இந்த பறவைகளை நோக்கினால் அவை சுதந்திரமாக மன அழுத்தம்,பிரச்சினைளின்றி வாழுகிறது.அதேபோல் மனிதர்களால் இருக்க முடியாத காரணம் யோசனைகள்,மன அழுத்தம் போன்றவையே.இவற்றுக்கு ஒரே வழி யோகாசனப் பயிற்சி தான்.
இதை தினமும் பயிற்சி செய்து வாருங்கள்,உடல்,மன உறுதியை பெறலாம். அத்தோடு, இரவு உறங்கும்போது நிமிர்ந்து அமர்ந்துவிட்டு,10 தடவைகள் மூச்சை உள்ளிழுத்து,வெளிவிட்டு பயிற்சி செய்து பாருங்கள்,மனது இலேசாகி விடும்
பறவை ஆசனம் எவ்வாறு செய்வது?
-
காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளுங்கள்.
பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு மேட் விரித்து செய்ய ஆரம்பியுங்கள்.
-
நிமிர்ந்து உட்காருங்கள், கண்களை மூடி,கைகளை சின் முத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள்.
இயல்பாக மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
கண்களை மெதுவாக திறந்து குப்புறப்படுத்து,ஒரு 5 வினாடிகள் மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
-
கைகளை சரியாக தலைக்கு மேலே துாக்கி ஒரு 5 வினாடிகள் போல் மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
பின் மூச்சை மெதுவாக உள்ளிழுத்துக்கொண்டு தலை மற்றும் கால்களை உயர்த்தி 10 வினாடிகள் மூச்சை நிறுத்தி வைத்து பின் மூச்சை விட்டு, உடலை தளர்த்த வேண்டும்.
-
பின் மூச்சை சாதாரணமாக விட்டு ஓய்வு எடுக்கவேண்டும்.
பின் மீண்டும் முதல் போல் செய்யுங்கள்.
-
முதலில் கடினமாக இருந்தாலும் பயிற்சி செய்தால் 20,30 நாட்களில் சரியாகிவிடும்.
-
பின் முதல் போல் சுஹாசனத்திற்கு வந்து கைகளை சின் முத்திரையில் வைத்தவாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு கொள்ளுங்கள்.
- மாதவிடாய் காலங்களில் இதை செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
பறவை ஆசனத்தின் பயன்கள்
- நமது நரம்பு மண்டலம் மற்றும் இரத்தோட்டம்,சுவாசவோட்டம்,வெப்பவோட்டம்,மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும்.
-
உடல் சுறுசுறுப்புக்கு,மற்றும் நீரிழிவு வராமலிருக்கவும் உதவும்.
-
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
-
எதிர்மறை எண்ணங்களை இல்லாது செய்யும்.
-
சோம்பல் சுறுசுறுப்பின்மையை நீக்க உதவும்.