உலக சுற்றுலாவில் கனேடிய குடும்பம்! கண் பார்வையை இழக்கும் மூன்று குழந்தைகள்: சோக பின்னணி
பார்வையை இழக்கும் தங்களது மூன்று குழந்தைகளுக்காக உலக சுற்றுலாவிற்கு தயாராகும் கனேடிய பெற்றோர்.
மரபணு நோயைக் குறைக்க தற்போது எந்த சிகிச்சையும் அல்லது மருத்துவ முறைகளும் இல்லை.
கனேடிய குடும்பம் ஒன்று தங்களது நான்கு குழந்தைகளில் மூன்று பேர் பார்வையற்றவர்களாக மாறுவதற்கு முன்பு உலக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
கனேடிய பெற்றோர்களான Edith Lemay மற்றும் Sebastien Pelletier தம்பதிகளின் நான்கு குழந்தைகளில் மியா, 12, கொலின், 7, மற்றும் லாரன்ட், 5 ஆகிய மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற மரபணு நோய் குறைபாட்டால் தங்களது கண் பார்வையை விரைவில் இழக்கவுள்ளனர்.
Instagram / pleinleursyeux
இந்த மரபணு நோயைக் குறைக்க தற்போது எந்த சிகிச்சையும் அல்லது மருத்துவ முறைகளும் இல்லை, எனவே Edith Lemay மற்றும் Sebastien Pelletier ஜோடி தங்கள் குழந்தைகள் தங்களது பார்வையை முழுவதுமாக இழக்கும் முன் உலகைப் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தி தர முடிவு செய்து உலக சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர்கள், “நான் அவர்களது காட்சி நினைவகத்தை எங்களால் முடிந்த சிறந்த, மிக அழகான படங்களால் நிரப்பப் போகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
Instagram / pleinleursyeux
மேலும் இந்தப் பயணம் மற்ற பல விஷயங்களுக்கு எங்கள் கண்களைத் திறந்து உள்ளது, அத்துடன் நம்மிடம் இருப்பதையும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நாங்கள் உண்மையில் அனுபவிக்க விரும்புகிறோம்" என்று பெல்லெட்டியர் கூறினார்.
ஆறு பேர் கொண்ட குழு ஜூலை 2021 இல் கிழக்கு கனடாவைச் சுற்றித் தொடங்கி, கடந்த வாரம் அவர்கள் மங்கோலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளனர்.
Instagram / pleinleursyeux
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் மறைவால் ஒன்றிணைந்த ராயல் குடும்பம்: ஊர்வலத்தில் இணைந்து பங்கேற்கும் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி
Edith Lemay மற்றும் Sebastien Pelletier தம்பதிகளின் நான்கு குழந்தைகளில் அவர்களது மகன் லியோ (9) மட்டும் இந்த குறைபாட்டில் இருந்து தப்பித்து உள்ளார்.