ராணியின் மறைவால் ஒன்றிணைந்த குடும்பம்: ஊர்வலத்தில் இணைந்து பங்கேற்கும் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் இன்று மதியம் 2.22pm மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இணைந்து ஊர்வலத்தில் பங்கேற்பு.
பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து மேற்கொள்ளப்படும் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் நடைப் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் வயது மூப்பு காரணமாக தனது 96வது வயதில் உயிரிழந்தார்.
Sky News
இதனை தொடர்ந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வடக்கு அயர்லாந்தின் செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
பிறகு லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் ராயல் உறவினர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் இன்று மதியம் 2.22pm மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் ஹால்-லுக்கு ( Westminster Hall) எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இதில் பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகிய வேல்ஸ் இளவரசர் வில்லியம், சசெக்ஸ் இளவரசர் ஹாரி இருவரும் ஊர்வலத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
Sky News
பக்கிங்ஹாம் அரண்மணையில் இருந்து மதியம் 2:22க்கு தொடங்கும் ஊர்வலம் மதியம் 3:00 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நிறைவடையவுள்ளது, சுமார் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த ஊர்வலத்தில் ராயல் உறவினர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள உள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு விஷயம் என்னவென்றால், பல்வேறு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹாரி இருவரும் பிரித்தானிய மகாராணியின் இறப்பை தொடர்ந்து இணைந்துள்ளனர்.
Sky News
அந்த வகையில் கடந்த வியாழன் அன்று ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹாரி இருவரும் தங்களது மனைவி கேட் மற்றும் மேகனுடன் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் அஞ்சலியைப் இணைந்து பார்வையிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி வழங்கினர்.
மேலும் வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் மீதான தனது அன்பைப் பற்றி மன்னர் மூன்றாம் சார்லஸ் பேசி இருந்தார்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: ராணி மறைவிற்கு பின் பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு பொருள்!
மகாராணிக்கு மிகவும் பிடித்தது அதில் ஹாரி மற்றும் மேகன் வெளிநாட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது அவர்கள் மீதான எனது அன்பையும் வெளிப்படுத்த விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார்.