17 வயது இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிசார்: பாரீஸில் கலவரம் வெடித்தது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் புறநகர் பகுதியில், காரை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்ற 17 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
17 வயது இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார்
நேற்று காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய சாரதியை சுட்டுக்கொன்றுள்ளனர்.
Credit: Twitter
அந்த சாரதியின் பெயர் Nael (17) என தெரியவந்துள்ளது.
வெடித்த கலவரம்
Nael பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் பாரீஸில் குவிந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடிக்க, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்த, பதிலுக்கு போராட்டக்காரர்கள் பொலிசார் மீது பட்டாசுகளை வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாரீஸ் கலவர பூமியாகியுள்ளதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகிவருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 9 பேரை கைது செய்துள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் வைத்த தீ ஆங்காங்கே பற்றி எரிந்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |