தடை விதிப்பில் ஐரோப்பாவிலேயே முதல் தலைநகராக மாறிய பாரிஸ்! எதில் தெரியுமா?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுய சேவை மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பாரிஸில் சுய சேவை (self - service) மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
AP
இதற்கு பலரும் வாக்களித்ததைத் தொடர்ந்து, சுய சேவை மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்த முதல் ஐரோப்பிய தலைநகரமாக பாரிஸ் மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1 (இன்று) முதல் இந்த தடை அமுலுக்கு வருகிறது. பல பாரிசியர்கள், Self-Service வாகனங்களை ஓட்டுபவர்கள் பாதசாரிகளுக்கு இடையே ஜிக்ஜாகிங் செய்வதைக் கண்டு கோபமுற்றதாக தெரிய வந்தது.
மேலும், நடைபாதைகளுக்கு நடுவே இந்த வாகனங்களை நிறுத்துவதும், சாலைகளில் இவற்றால் பல விபத்துகள் ஏற்படுவதும் இந்த தடைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
Chesnot/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |