ஒரே நாளில் தொடர் பிரச்சினைகள்... பாரீஸில் சுரங்க ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான பயணிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த வாரத்தில் பயணிகள் சுரங்க ரயிலுக்குள் சிக்கி அவதியுறும் நிலை உருவானது.
வரிசையாக ஏற்பட்ட பிரச்சினைகள்
புதன்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட சிக்னல் பிரச்சினையால் ரயில்கள் பிரச்சினையை சந்தித்த நிலையில், 6.45 மணியளவில், பெண் பயணி ஒருவரின் முதுகுப்பை கதவில் சிக்கிக்கொள்ள அலாரம் ஒலிக்கத் துவங்கியது.
நிறுத்தப்பட்ட சில ரயில்களை, தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மீண்டும் இயக்க முடியாமல் போயிற்று.
அதே நாள் இரவு 8.30 முதல் 10.00 மணி வரை கணினிக்கோளாறு காரணமாக ஒரு மொத்த ரயில் பாதையும் பாதிக்கப்பட, ரயில் சேவை அப்படியே ஸ்தம்பித்துப்போனது.
மேலும் வழியில் பழுதாகி நின்ற ஒரு ரயிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாயிற்று.
ஆக மொத்தத்தில் அன்றைய நாள் பயணிகளுக்கு மோசமான நாளாகிவிட்டது.
மன்னிப்புக் கோரிய ரயில்வே
பின்னர், பாதிப்புகளுக்காக பயணிகளிடம் ரயில்வே மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட சுரங்கப்பாதைக்குள் அடுத்த ரயில் நிலையத்தை நோக்கி அவர்கள் நடக்கத் துவங்கினர்.
En direct de la ligne 4. pic.twitter.com/UWBcVmxmwq
— Timothée (@tlevillayer) June 14, 2023
இந்நிலையில், பொதுப்போக்குவரத்து ஆபரேட்டர்களின் தலைமை நிர்வாகியாகிய Jean Castex, வரிசையாக இப்படி நடந்த இந்த அசாதாரண சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
பிரச்சினைகளைக் கண்டுபிடித்துத் தீர்வு காண்பதில் சிறந்தவர் என பெயர் பெற்றவராகிய முன்னாள் பிரதமரான Jean Castexஐ, பொதுப்போக்குவரத்துத் துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் போக்குவரத்துத்துத் துறையின் தலைவராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.