2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக இந்திய அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?
2024-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் (Olympics 2024) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இம்மாதம் 26-ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் உலக விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புக்காக இந்திய அரசு பெருமளவு செலவு செய்துள்ளது.
முக்கிய விளையாட்டுகளுக்கு பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசு எந்தெந்த விளையாட்டுகளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது? எந்த விளையாட்டுக்கு அதிக செலவு செய்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அதேசமயம் மற்ற எல்லா விளையாட்டுகளையும் விட தடகளப் போட்டிகளுக்கு இந்திய அரசு அதிக செலவு செய்துள்ளது. தடகளப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.96.08 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, இந்தியா பேட்மிண்டனுக்கு அதிக செலவு செய்தது. பேட்மிண்டனுக்கு அரசு ரூ.72.03 கோடி செலவிட்டுள்ளது.
மேலும், குத்துச்சண்டைக்கு ரூ.60.93 கோடியும், துப்பாக்கி சூடும் போட்டிக்கு ரூ.60.42 கோடியும், ஹாக்கிக்கு ரூ.41.3 கோடியும், வில்வித்தைக்கு ரூ.39.18 கோடியும், மல்யுத்தத்துக்கு ரூ.37.8 கோடியும், பளு தூக்குதலுக்கு ரூ.27 கோடியும் மத்திய அரசு செலவிட்டுள்ளது.
அதேபோல், டேபிள் டென்னிஸுக்கு 12.92 கோடியும், ஜூடோவுக்கு ரூ.6.33 கோடியும், நீச்சலுக்கு ரூ.3.90 கோடியும், rowing போட்டிக்கு ரூ.3.89 கோடியும், sailing செய்ய ரூ.3.78 கோடியும் செலவிட்டுள்ளது.
கோல்ஃப் விளையாட்டிற்கு ரூ.1.74 கோடியும், டென்னிஸுக்கு ரூ.1.67 கோடியும், equestrian-க்கு ரூ.95.42 கோடியும் மத்திய அரசு செலவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
paris olympics 2024 india, paris olympics 2024, how much India spent for Paris Olympics 2024