உக்ரைனுக்காக நாங்கள் சாகமுடியாது: மேக்ரானுக்கு பிரான்சிலேயே எதிர்ப்பு
உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விடயம், இன்று உலக அரசியலாகியுள்ளது. உக்ரைன் ஆதரவு, ரஷ்ய ஆதரவு என உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது.
இந்நிலையில், ஐரோப்பா சார்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முன்வைக்கும் பல திட்டங்கள் போர்ப்பதற்றத்தை அதிகரித்துவருகின்றன.
உக்ரைனுக்கு தன் நாட்டு வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மேக்ரான், உக்ரைன் விடயத்தில் பிற ஐரோப்பிய நாடுகளின் ஆதரவையும் நாடியுள்ளார்.
மேக்ரானுக்கு பிரான்சிலேயே எதிர்ப்பு
ஆனால், மேக்ரானுக்கு பிரான்சிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஆம், அமைதியாக ஆளாளுக்கு தங்கள் நாட்டில் வாழ்ந்துவரும் நிலையில், இன்னொரு நாட்டுக்காக போரிடச் சென்று உயிர் விட யாரும் தயாராக இல்லை.
இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி, உக்ரைனுக்கு தன் நாட்டு ராணுவ வீரர்களை அனுப்ப முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அனுப்ப பிரான்ஸ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சனிக்கிழமையன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், உக்ரைனுக்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் மக்கள் ஆயிரக்கணக்கனோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
உக்ரைனுக்காக நாங்கள் சாகமுடியாது, மேக்ரான், நேட்டோவை விட்டு உடனே வெளியேறுங்கள் எனக் கூறும் பதாகைகளுடன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |