காமெடியால் மக்களை ஈர்த்த பரிதாபங்கள் YouTube சேனல் - அதன் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோபி, சுதாகரின் பரிதாபங்கள் YouTube சேனலின் வருமானம் என்ன ? ஒரு மாதத்திற்கு எவ்வளவு கிடைக்கும் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ள கேள்வியாகும்.
பரிதாபங்கள் YouTube சேனல்
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் தான் யூடியூபர் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் 2018 ஆம் ஆண்டில் YouTube சேனலலை தொடங்கினர். இதன் மூலம் வருவாய் ஈட்டுவது தற்போது பல இளைஞர்களின் பொழுதுபோக்காகி விட்டது.
பொதுவாகவே யூடியூப்பில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு வீடியோவிற்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து தான் பணம் கிடைக்கும்.
அந்தவகையில் இவர்களின் சேனலில் காமெடி தொடர்பான வீடியோக்கள் தான் அதிகம் பதிவேற்றப்பட்டு வருகிறது.
வாரத்தில் இரண்டு முறை டிரெண்டிங் அல்லது பண்டிகையை மையப்படுத்தி பரிதாபங்கள் சேனலில் வீடியோ வெளியிடப்படும்.
இந்த YouTube சேனலில் சுமார் 5.84 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இதுவரை 991 வீடியோக்களை கோபி, சுதாகர் பதிவிட்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் பரிதாபங்கள் சேனலில் வெளியான வீடியோக்களை 159 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரத்து 563 பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த சேனலின் நிகர மதிப்பு எவ்வளவு?
90 நாட்களுக்கு 1,44,000 டாலர் என்ற அடிப்படையில் ஒரு கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 808 ரூபாய் கிடைத்திருக்கும்.
சேனலில் பதிவிடப்படும் ஒவ்வொரு வீடியோவின் ஆயிரம் பார்வைக்கு 1.21 டாலர் கிடைக்கும். வீடியோவில் வரும் விளம்பரங்களுக்கும் சேர்த்தே இந்த பணம் கிடைக்கும்.
குறித்த சேனலின் நிகர மதிப்பு 5 கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 995 ரூபாய் முதல் 30 கோடியே 39 லட்சத்து 34 ஆயிரத்து 944 ரூபாய் வரை இருக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சராசரியை கணக்கிட்டால் 16 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 984 ரூபாய் இருக்கும்.
மேலும் இதன் மாத வருமானம் குறித்து பார்த்தால்,
- ஜனவரி 2024 - 25,15,935 ரூபாய்
- பிப்ரவரி 2024 - 29,88,728 ரூபாய்
- மார்ச் 2024 - 18,99,615 ரூபாய்
- ஏப்ரல் 2024 - 33,85,537 ரூபாய்
- மே 2024 - 31,99,797 ரூபாய்
- ஜூன் 2024 - 39,59,643 ரூபாய்
- ஜூலை 2024 - 30,56,270 ரூபாய்
- ஆகஸ்ட் 2024 - 46,77,276 ரூபாய்
- செப்டம்பர் 2024 - 29,88,728 ரூபாய்
- அக்டோபர் 2024 - 37,90,788 ரூபாய்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |