உடலுக்கு சத்து தரும் பருப்பு கீரை கடையல் செய்வது எப்படி?
பருப்பு கீரையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இதில் இருக்கும் ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை சத்துகள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
அந்தவகையில் பருப்பு கீரை கடையல் எப்படி வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 3
- பூண்டு பல் - 5
- பச்சை மிளகாய் - 2
- புளி
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- கல்லுப்பு - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
- தண்ணீர் நெய் - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தட்டிய பூண்டு பல் -5
- சிவப்பு மிளகாய் - 2
- கறிவேப்பிலை
- பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
1. முதலில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4,5 விசில் வரும் வரை வதக்கவும்.
2. அதன் பிறகு சமைத்த பருப்பு கலவையை ஒரு மத்தால் நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.
3. ஒரு கடாயில் நான்கு டீஸ்பூன் நெய் ஊற்றவும்.
4. அதனுடன் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
5. கடுகு பொரிந்ததும், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் தட்டிய பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான பருப்பு கீரை கடையல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |