அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.
துரோகம் செய்த அவுஸ்திரேலிய வீராங்கனை
இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2026 மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தற்போது அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்டகால காதலியான மோனிகா ரைட்டை ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் தன்பாலின திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்குமிடையே பிரிவு உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தனக்கு துரோகம் செய்துள்ளதாக மோனிகா ரைட் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பதிவிட்ட மோனிகா ரைட், இவருடன் தான் என் மனைவி துரோகம் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் பின்னர் இவர்களுக்குள் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்த போதே கார்டனர் மற்றும் வோல்க்கு இடையே உறவு இருந்ததாகவும், அது தெரியாமல் உலககிண்ணத்தில் கார்டனருக்கு ஆதரவளிக்க மோனிகா இந்தியா வந்துள்ளார்.
அவுஸ்திரேலியா திரும்பிய பின்னர் மோனிகாவிடம் அவருக்கு துரோகம் செய்ததை கார்டனர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருவரும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான மருத்துவமனை முன்பதிவையும் செய்திருந்த நிலையில், இந்த பிரிவால் அந்த முன்பதிவை மோனிகா ரத்து செய்துள்ளார்.
இதன் பின்னர் தனது திருமண மோதிரத்தை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்த மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு சொல்லாமல் கார்ட்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த விவகாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |