பருத்திவீரன் பட புகழ் கிராமிய பாடகி லெட்சுமி அம்மாள் காலமானார்
பருத்திவீரன் படத்தில் ''ஊரோரம் புளியமரம்'' பாடல் பாடிய கிராமிய பாடகி லெட்சுமி அம்மாள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மதுரை மாவட்டம் சுப்புரமணிபுரத்தில் லெட்சுமி அம்மாள் பிறந்தார்.
இவர் சிறுவதில் இருந்தே தனது அம்மாவிடம் நாட்டு புற பாடல்களை கற்றுக்கொண்டு கோவில் திருவிழாக்களில் பாடி வந்தார்.

அப்போது ஒருமுறை மதுரையில் பாடியபோது இயக்குனர் அமீர் அவரை அழைத்து சென்று படத்தில் பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பாடியதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பாடலில் நடித்ததன் காரணமாக அந்தச் சமயத்தில் பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்றார்.
இதன்மூலம் அவருக்கு கோவில் திருவிழாக்களில் அதிக வரவேற்பு கிடைத்தது.

பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான லெட்சுமி அம்மாள் கடந்த சில வருடங்களாக வயது முதிர்வின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், 75 வயதான லெட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |