முதுகு வலியால் பெரும் அவஸ்தையா? கவலை வேண்டாம்! தினமும் இந்த பயிற்சியை செய்து வாருங்க!
Exercise
Yoga
back pain
By Kishanthini
இளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருவதனால் அடிக்கடி இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகுவலியை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட 60% மக்கள் முதுகு வலிக்கு மருத்துவமாக வலி நிவாரணிகளே எடுத்து கொள்கின்றார். இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது.
இதனை போக்க சில யோகாசனங்கள் பெரிதும் உதவுகின்றது.
அதில் ஒன்றான பர்வட்டாசனம் முதுகுவலியை போக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது. தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம் போடவும்.
-
இரு கைகளையும் காதோடு சேர்ந்து தலைக்கு மேல் கும்பிடவும்.
- சாதாரண மூச்சில் இருபது வினாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
- பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும்.
- தரையில் சுகாசனத்தில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும். மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்
- முதுகுத்தண்டுவடம் திடப்படும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
- சிறுநீரகம், சிறுங்குடல், பெருங்குடல், இதயம், நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
- உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் நன்றாக கிடைக்க வழிவகை செய்கின்றது. சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US