சிக்ஸர் மழையில் 53 பந்தில் முதல் சதம்! அடித்து நொறுக்கிய 22 வயது வீரர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில், வங்காளதேசத்தில் பர்வேஷ் ஹொசைன் இமோன் அதிரடி சதம் விளாசினார்.
பர்வேஷ் முதல் சதம்
ஷார்ஜாவில் நடந்த டி20 போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் (10), லித்தன் தாஸ் (11) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
டௌஹித் 15 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மெஹிதி ஹசன் 2 ஓட்டங்களில் வெளியேறினார்.
UAE-Bangladesh T20Is – 1st T20I, Sharjah Cricket Stadium:
— UAE Cricket Official (@EmiratesCricket) May 17, 2025
Player of the match Parvez Hossain Emon produced a sensational 100-run innings to spearhead Bangladesh’s 27-run win in the series opener.
The left-hander hit 9 towering 6s and 5 4s in his 54-ball innings!#UAEvBAN pic.twitter.com/q2ZEqQFXwj
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ச்சியடைய, மறுபுறம் தொடக்க வீரரான பர்வேஷ் ஹொசைன் இமோன் (Parvez Hossain Emon) சிக்ஸர் மழை பொழிந்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பர்வேஷ் 53 பந்துகளில் தனது முதல் சதத்தை விளாசினார். வங்காளதேச அணிக்கு 9 ஆண்டுகளில் கிடைத்த முதல் சதம் இதுவாகும். மொத்தம் 54 பந்துகளை எதிர்கொண்ட பர்வேஷ், 9 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.
வங்காளதேசம் வெற்றி
இதன்மூலம் வங்காளதேசம் 191 ஓட்டங்கள் குவித்தது. அபாரமாக பந்துவீசிய முகமது ஜவாதுல்லா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 20 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அணித்தலைவர் முகமது வசீம் 54 (39) ஓட்டங்களும், ஆசிப் கான் 42 (21) ஓட்டங்களும், ராகுல் சோப்ரா 35 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்காளதேச அணியின் தரப்பில் ஹசன் முகமது 3 விக்கெட்டுகளும், தன்ஸிம் ஹசன் மற்றும் மஹெதி ஹசன் மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |