பசங்க படத்தில் சிறுவனாக நடித்தவர் - இன்று நிறுவனம் ஒன்றின் CEO
பசங்க படத்தில் சிறுவனாக நடித்த ஸ்ரீராம் இன்று நிறுவனம் ஒன்றின் CEO ஆக உள்ளார்.
நடிகர் ஸ்ரீராம்
கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீராம். பாண்டிராஜ் இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் ஜீவானந்தம் என்ற சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்று பிரபலம் அடைந்தார்.
அதன் பின்னர், வேங்கை, ஜில்லா, கோலிசோடா என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர்தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
நிறுவன CEO
இந்நிலையில், இவர் பயோடெக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை தளமாக கொண்டு செயல்படும், Aatrel என்ற நிறுவனத்தின் CEO ஆக உள்ளார் ஸ்ரீராம்.
2050 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் கார்பன் அளவை பூஜ்யமாக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த நிறுவனம் செயல்படுகிறது.
மேலும், பாசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மறுசுழற்சி செய்தல் போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |