இத்தாலிய கப்பலில் பற்றிய தீ: மேலும் ஒரு பயணி பத்திரமாக மீட்பு
இத்தாலிய நாட்டு கப்பலான ரோஃபெரி ஒலிம்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் காணாமல் போன 12 நபர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக கிரேக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கிரேக்க துறைமுகம் இகோமெனிட்சாவிலிருந்து இத்தாலிய துறைமுகம் பிரிண்டிசிக்கு இத்தாலிய தேசிய கொடியுடன் யூரோஃபெரி ஒலிம்பியா என்ற கப்பல் புறப்பட்டது.
கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
Shocked and sleep-deprived, passengers rescued from a Greece-Italy ferry that caught fire off the island of Corfu said they felt relieved to be alive, though some feared for their livelihoods after losing trucks and cargo https://t.co/SWlGRL4nGz pic.twitter.com/jwddM1Lg7l
— Reuters (@Reuters) February 19, 2022
அந்த கப்பலில் 241 பயணிகள், 51 பணியாளர்கள் என மொத்தம் 292 நபர்கள் பயணித்த நிலையில், கிட்டத்தட்ட 280 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீதமுள்ள 12 நபர்களை காணவில்லை என மீட்புக்குழு அறிவித்து தேடிவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான கப்பலை இழுத்து கரைக்கு கொண்டு சேர்க்கும் பணி நடைபெற்றது.
அப்போது கப்பலின் பின்புறம் ஒருவர் சிக்கிக்கொண்டு இருப்பதை மீட்புக்குழுவினர்கள் கண்டுபிடித்து அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்தநிலையில் தேடப்பட்டுவந்த 12 நபர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிரேக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.