ரயில் மோதி பலியான பயணி... பாரீஸில் சாரதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
பாரீஸ் மெட்ரோ ரயிலின் கதவில் ஒரு பெண்ணின் கோட் சிக்கி அவர் பிளாட்பாரத்தில் இழுத்துச் செல்லப்பட்டதுடன், ரயில் மோதி ஒரு பயணியும் உயிரிழந்த இரட்டை துயரம் பிரான்ஸ் தலைநகரில் நடந்துள்ளது.
இரட்டை துயரம்
இன்று, பாரீஸ் மெட்ரோ ரயில் பாதை ஒன்றில் பயணி ஒருவர் மீது ரயில் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவர் பலியானார். மேலும், மெட்ரோ ரயிலின் கதவில் ஒரு பெண்ணின் கோட் சிக்கி அவர் பிளாட்பாரத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பயணி ஒருவர் ரயில் மோதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த ரயிலின் சாரதி முறைப்படி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
Photo by Emmanuel DUNAND / AFP
ரயில்வே யூனியன் வேலைநிறுத்தம்
இந்நிலையில், ரயில் சாரதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் யூனியன் ஒன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சக ஊழியர் தனது வேலையைச் செய்ததற்காக குற்றவாளியைப் போல கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் காவலில் அடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
thelocal.com
இந்த விபத்தைத் தொடர்ந்து சில மார்க்கங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதம், அதாவது ஏப்ரலில் மட்டும் 4 பேர் பாரீஸ் ரயில் பாதைகளில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.