நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை
அகமதாபாத் விமான விபத்தில் தப்பியவருக்கு மனநல சிகிச்சை மேற்கொள்வதாக அவரது உறவினர் கூறியுள்ளார்.
உறவினர் கூறியது?
கடந்த ஜூன் 12-ம் திகதி அன்று குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.
இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருடைய குடும்பத்தினர் டாமன் அண்ட் டையு தீவில் கடலோர நகரமாக உள்ள டையுவில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், விஸ்வாஸ் குமாரின் உறவினர் ஒருவர் கூறுகையில், "விமான விபத்திற்கு பிறகு லண்டனில் உள்ள உறவினர்கள் போனில் அழைத்து விஸ்வாஸ் குமாரின் உடல்நிலை குறித்து விசாரிக்கின்றனர். ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை.
திடீரென நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்கிறார். அதற்கு பிறகு மன அழுத்தம் காரணமாக தூங்காமல் தவிக்கிறார். விமான விபத்து மற்றும் சகோதரர் உயிரிழப்பு ஆகியவை அவரை பாதித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் விஸ்வாஸை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம். இப்போது தான் சிகிச்சை ஆரம்பித்துள்ளது. லண்டனுக்கு செல்வது குறித்து அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |