விமானத்தில் ஆண் ஒருவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! பின்னர் நடந்தது என்ன?
விமான நிலையத்தில் ஒருவர் முகக்கவசத்துக்கு பதிலாக உள்ளாடையை அணிந்து வந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் செய்த செயல் மற்ற பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த பயணி முகக்கவசத்துக்கு பதிலாக வித்தியாசமான வகையில் உள்ளாடையை முகக்கவசமாக அணிந்தபடி இருந்துள்ளார். இதையடுத்து விமான பணிப்பெண் அந்த நபரிடம் சரியான முகக்கவசத்தை அணியுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்த பயணி விமான பணிப்பெண்ணுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் கொரோனா தடுப்பு அதிகாரிகள் அவரிடம் பேசி விமானத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த நபர் கூறியதாவது,
இதற்கு முன்னர் விமான பயணத்தில் நான் உள்ளாடையை முகக்கவசமாக அணிந்துதான் பயணம் செய்தேன். இனியும் அப்படிதான் செய்வேன். நான் வெளியேற்றப்பட்டதும் எனக்கு ஆதரவாக சில பயணிகள் வெளியேறினர் எனத் தெரிவித்துள்ளார்.