சீன மக்களால் மீண்டும் உலக நாடுகளுக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல்: எச்சரிக்கும் நிபுணர்கள்
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் அங்குள்ள மக்களால் உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கட்டாய பரிசோதனை
சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள மக்களில் சரிபாதி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சீன பயணிகளை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்திய இத்தாலி, அதில் 50% சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.
@AP
இத்தாலிய மக்களை இன்னொரு சிக்கலில் தள்ள நாடு தயாராக இல்லை எனவும் அதனாலையே, வெளிநாட்டு பயணிகளை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மொத்தமும் தளர்த்தப்பட்ட நிலையில், 2020க்கு பின்னர் முதன் முறையாக பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளும் விசாவும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், ஜனவரியில் லூனார் புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாடும் பொருட்டு, மில்லியன் கணக்கான சீனர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுக்க உள்ளனர். 2020 ஜனவரியிலும், இதேப்போன்று லூனார் புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாட வெளிநாடுகளுக்கு படையெடுத்த சீனர்களால் தான் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
@AP
அதிகரிகரித்துள்ள அச்சம்
மேலும், இத்தாலியில், சீன பயணிகளில் சரிபாதி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அச்சம் அதிகரிகரித்துள்ளது. மேலும், சீனாவில் தற்போது நான்கு வகையான கொரோனா தொற்றுகள் பரவிவருவதாகவும், இதுவரை அதை உறுதி செய்ய முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சீனாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான், இந்தியா, தைவான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது.
@AP
அமெரிக்காவும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளதுடன், தேவையெனில் பரிசோதனைகளும் கட்டாயம் என அறிவித்துள்ளது.
ஆனால், பிரித்தானியா இதுவரை சீன பயணிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.