விமானத்தை கைகளால் தள்ளிச்சென்ற பயணிகள்! என்ன நடந்தது? இணையத்தில் வைரலாகும் வீடியோ
நேபாளத்தில் பழுதடைந்த நின்ற விமானத்தை பயணிகள் கைகளால் தள்ளிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேபாளத்தில் உள்ள பாஜுரா விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பாஜுரா விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த தகவலின் படி, நேபாளின் Simkot-ல் இருந்து புறப்பட்ட Tara விமான நிறுவனத்திற்கு சொந்தமான 9N-AVE பயணிகள் விமானம் பாஜுரா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.
பின்னர், ஓடுபாதையிலிருந்து வரும் பாதையில் டயர் வெடித்ததால் விமானம் பழுதடைந்து நின்றது.
ஓடுபாதைக்கு செல்லும் பாதை 9N-AVE விமானத்தால் தடைப்பட்டது.
இதனால், மற்ற விமானங்கள் ஓடுபாதையிலிருந்து வரவோ அல்லது ஓடுபாதைக்கு செல்லவோ முடியவில்லை.
இதனையடுத்து, பயணிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை பாதையிலிருந்து ஓரமாக தள்ளிச்சென்றனர்.
பின், Nepalganj-ல் இருந்து மற்றொரு Tara விமானம் புதிய டயர் மற்றும் பொறியாளர்களுடன் பாஜுரா வந்தடைந்தது.
இதன் பின் 9N-AVE பயணிகள் விமானம் பழுதுபார்க்கப்பட்டு Nepalganj-க்கு புறப்பட்டுச்சென்றது என பாஜுரா விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.