‘ஒரே வார்த்தையில்’ ஒட்டுமொத்த விமான நிலையத்தையே கிடுகிடுக்க வைத்த நபர்.. பீதியில் உறைந்த பயணிகள்! என்ன சொன்னார்?
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பயணி ஒருவர் ஒட்டுமொத்த விமான நிலையத்தையே பெரும் அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவின் பல மாநிலங்கள் விமானத்தில் பயணிக்க கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனே புறப்பட தயாரான இண்டிகோ விமானம் ஓடுபாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார்.
சம்பவம் குறித்து விமானநிலைய அதிகாரி கூறியதாவது, விமானம் ஓடுபாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, பயணி ஒருவர், தனது கொரோனா சோதனை முடிவு தற்போது தான் கிடைத்தது எனவும், அதில் வைரஸ் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமானக் குழுவினரிடம் கூறியுள்ளார்.
உடனே விமானிக்கு தகவல் அளிக்கப்பட்ட விமானம் மீண்டும் முனைக்கு திருப்பப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் அந்த பயணியை அழைத்து சென்றுள்ளனர். இதன் பிறகு அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் 1 மணிநேரத்திற்கு பிறகு பயணிகளுடன் விமானம் புனே புறப்பட்டு சென்றுள்ளது. எனினும், குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் பயணித்தனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.