அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள்: ஜேர்மனி முடிவு
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் நேற்று வெளியிட்ட அறிவிப்பொன்றின்போது, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் ஏற்கனவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாதங்கள் அதிகரித்துவரும் நிலையில், விசா இல்லாமல் ஜேர்மனிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றவியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்படும் அச்சுறுத்தலையும், சட்டவிரோத புலம்பெயர்தலையும் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இத்தகைய பிரச்சினைகளிலிருந்து நம் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றார் அவர்.
ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |