சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி காயமடைந்த விவகாரம்: புதிய கோணத்தில் திரும்பிய வழக்கு
சுவிஸ் நகரமொன்றில் வெடிவிபத்தில் சிறுமி ஒருத்தி காயமடைந்த விவகாரத்தில், வழக்கு புதிய கோணத்தில் திரும்பியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வெடித்த பார்சல் வெடிகுண்டு
நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், 12 வயது சிறுமி ஒருத்தி படுகாயமடைந்தாள்.
அவளது வயிற்றில் பல மணி நேர அறுவை சிகிச்சை நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், கோடையில், Saint-Jean எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், இந்த பார்சல் வெடிகுண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். அந்த குண்டு வெடிப்பிலும் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த அந்த நபரும் அதே வீட்டில் வாழும் வேறொரு நபரும் Patek Philippe என்னும் கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் வேலை செய்யும் அந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்துக்கும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என தாங்கள் கருதுவதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
புதிய கோணத்தில் திரும்பிய வழக்கு
இந்நிலையில், Patek Philippe கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம், தனது பணியாளர்களை அந்த வெடிவிபத்து தொடர்பில் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்து, அதில் இரண்டாவது சம்பவம் Patek Philippe நிறுவன ஊழியர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டதுபோல் தோன்றுவதையடுத்து, அந்த நிறுவனம் தனது பணியாளர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
எதனால் Patek Philippe நிறுவன பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. என்றாலும், அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லைகொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தனது பணியாளர்கள் மீதான தாக்குதல் குறித்து Patek Philippe நிறுவன நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பெடரல் அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |