சகோதரர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்! தோனியை சந்தித்த இலங்கை வீரரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
இலங்கை வீரர் மதீஷா பதிரனாவின் குடும்பத்தினர் தோனியை சந்தித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஜூனியர் மலிங்கா
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா. 20 வயது இளம் வீரரான இவர் ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படுகிறார்.
Image: AP Photo/Aijaz Rahi
2023 ஐபிஎல் தொடரில் இதுவரை 17 விக்கெட்களை கைப்பற்றி மிரட்டி வருகிறார். அத்துடன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். தோனியின் முழு ஆதரவை சரியாக பயன்படுத்தி பதிரனா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
Image: Instagram/vishuka_pathirana
மதீஷா சகோதரின் பதிவு
இந்த நிலையில் பதிரனாவின் குடும்பத்தினரை தோனி சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிரனாவின் சகோதரி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், 'மதீஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்று தோனி சொன்னபோது மல்லி பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதை விட அதிகமாக இருந்தன' என குறிப்பிட்டுள்ளார்.