பழங்குடியினருக்கு மறுப்பு! கொந்தளித்த கமல்ஹாசன்
பத்து தல படத்திற்கு சென்ற பழங்குடியினர் திரையரங்கினுள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
படம் பார்க்க அனுமதி மறுப்பு
நேற்று வெளியான சிம்புவின் பத்து தல திரைப்படத்தைக் காண, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ரோகிணி திரையரங்கத்திற்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் இதற்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பழங்குடியினர் தாமதமாக திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர்.
கமல்ஹாசன் கண்டனம்
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், 'டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது' என தெரிவித்துள்ளார்.
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. https://t.co/k9gZaDH0IM
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2023