அதிமுவுடன் கூட்டணி சேர்ந்த பாமக! எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்திலும், கூட்டணி விஷயத்திலும் தீவிரமாக இறங்கியுள்ளன.
அந்த வகையில், அதிமுக-வுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக-வும், பாமகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரு கட்சிகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கித் தரப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
