பயணம் செய்ய வேண்டாம் என்ற நாடுகளிலிருந்து குடியேற தடைவிதிக்க வேண்டும்: ஒன் நேஷன் தலைவர்
அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க பவுலின் ஹான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒன் நேஷன் தலைவர் பவுலின் ஹான்சன், அவுஸ்திரேலியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பயணம் செய்ய வேண்டாம்
அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் டிராவலரில் இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் 'கடுமையான ஆபத்து' இருப்பதால், அந்த இடங்களைத் தவிர்க்குமாறு இது அவர்களை எச்சரிக்கிறது.
தற்போது இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈரான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரைன், வட கொரியா மற்றும் சிரியா ஆகியவை அடங்கும்.
பவுலின் ஹான்சன்
இந்த நிலையில், ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பவுலின் ஹான்சன் (Pauline Hanson) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், "கடுமையான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அபாயங்கள் காரணமாக ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் அவுஸ்திரேலியர்களை எச்சரித்தால், அந்நாட்டில் இருந்து வரும் சாதாரண குடியேற்றத்தை வழக்கம்போல் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'புதிதாக வருபவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதில் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் மீது அவுஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கை இல்லை' என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியர்களை பாதுகாப்பதில் அல்பேனிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் பவுலின் ஹான்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |