பவன் கல்யாண் - அன்னா கோனிடலா விவாகரத்து: கூட்டறிக்கை வெளியிட்ட தம்பதி
Pawan Kalyan Wife Anna Konidala Announced Separation of marriage: பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கோனிடலா இருவரின் 13 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பவன் கல்யாண் - அன்னா கோனிடலா விவாகரத்து
ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கோனிடலா தங்களது 13 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பவன் கல்யாணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இருவரும் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
எங்களது திருமணம் முடிவுக்கு வந்த போதிலும், நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றும், எங்களின் குழந்தைகளுக்கு எப்போது அன்புள்ள மற்றும் பொறுப்புள்ள பெற்றோராக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் மகிழ்ச்சியும், நல்வாழ்வுமே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எங்களின் இந்த தனிப்பட்ட மாற்றத்திற்கு தேவையான அமைதியையும், தனிப்பட்ட உரிமையையும், மரியாதையையும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருமண வாழ்க்கை பவன் கல்யாண் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அவரது மனைவி அன்னா கோனிடலா கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பொலேனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் பவனோவிச் என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.