துணை முதல்வராக பொறுப்பேற்ற நடிகர் பவன் கல்யாண்
ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றார்.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில், பவன் கல்யாண் உட்பட நாரா லோகேஷ், அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர் ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் மந்திரி அலுவலகத்திற்கு சென்ற ஜனசேனா தலைவர் கோப்புகளில் கையெழுத்திட்டு, ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு தலைவர்களிடம் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன.
முன்னதாக, தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து துறைகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டறிந்தார் பவன் கல்யாண்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |