பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்! பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமாருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் வாழ்த்து
இந்திய தலைநகரான டெல்லியில் நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார்.
இதனால் அவரது ரசிகர்கள் நேற்று முதல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு ஜிப்லைன் ஆப்ரேட்டர் சமிக்ஞை கொடுத்தாரா? சுற்றுலா பயணி கொடுத்த தகவல்
அந்தவகையில் நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து பதிவில், "அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பத்ம பூஷண் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |