தீ விபத்தில் உயிர் தப்பித்த மகனுக்காக திருப்பதியில் மொட்டை அடித்த பவன் கல்யாண் மனைவி
பள்ளி தீ விபத்தில் உயிர் பிழைத்த மகனுக்காக ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண் மனைவி திருப்பதியில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
பவன் கல்யாண் மனைவி வேண்டுதல்
ஆந்திர துணை முதலமைச்சரின் மனைவி அன்ன லெஜினோவா. இவர்களுடைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
அண்மையில் இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் உடனே பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்து சென்று, மகனுக்கு ஆறுதல் கூறினார்.
தற்போது மகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதால், மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு ஹைதராபாத்திற்கு வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பவன் கல்யாண் மனைவி அன்ன லெஜினோவா திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு, தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
அப்போது அவர் தான் கிறிஸ்தவன் என்றாலும் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி கையெழுத்திட்டு தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.
அவர் ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்த பிறகு புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்தார்.
தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகனுக்காக முடி காணிக்கை செலுத்தி விரதத்தை முடித்துக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |