பணம் செலவிட்டு கொரோனா நோயை வாங்கும் மக்கள்: விசித்திர காரணம்

covid19 vaccine infection people coronaviruss
By Arbin Jan 12, 2022 08:36 PM GMT
Report

இத்தாலியில் தடுப்பூசி மறுப்பாளர்கள் 110 பவுண்டுகள் வரை செலவிட்டு கொரோனா நோயாளிகளுடன் உணவருந்தி, தங்களுக்கும் நோய் பரவ வேண்டும் என காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்ற விதி இருப்பதால், தற்போது தடுப்பூசி மறுப்பாளர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களுடன் பணம் செலவிட்டு கொரோனா தொற்றை வாங்குகின்றனர்.

பிப்ரவரி முதல் திகதியில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விதி இத்தாலியில் அமுலுக்கு வர இருக்கிறது.

தடுப்பூசி மறுப்பாளர்கள் பெருந்தொகை அபராதமாக செலுத்த நேரிடும் அல்லது தங்கள் வேலையை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ள மக்களுக்கு தடுப்பூசி கட்டாயமல்ல.

அவர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி இந்த காலகட்டத்தில் உருவாகும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கண்டிப்பாக தேசிய சுகாதார அட்டையில் தங்கள் தரவுகளை பதிவு செய்யவும் வேண்டும்.

அப்படி பதிவு செய்துள்ள மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியில் இருந்து விலக்கு அளிக்கப்படும், அதற்காக தடுப்பூசி மறுப்பாளர்கள் மரண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது முதல், கொரோனா தொற்றாளர்களை அழைத்து தடுப்பூசி மறுப்பாளர்கள் விருந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தாங்கள் பூரண குணமடைந்து திரும்புவோம் என்றே இவர்கள் நம்புகின்றனர். Tuscany பகுதியில் அவ்வாறாக நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு தலா 110 பவுண்டுகள் பரிசாக அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுபோன்ற கொரோனா விருந்து கூட்டங்களை தடுக்க பொலிசார் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.  இத்தாலியில் இருந்து கொரோனா விருந்து கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த 'கொரோனா வைரஸ் விருந்துகளில்' கலந்து கொண்ட பின்னர் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் பலர் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

வடக்கு இத்தாலியில் இதுபோன்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 55 வயதான ஆஸ்திரிய நாட்டவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

இதே விருந்தில் கலந்து கொண்ட சிறார் உட்பட மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாலி முழுவதும் பல மாகாணங்களில் இதுபோன்ற கொரோனா விருந்துகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது. 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US