ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்து ஒற்றை ட்வீட்: CEOக்கு எழுந்த கடும் கண்டனங்கள்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட பதிவிற்கு Paytm CEO கடும் கண்டனங்களை சந்தித்தார்.
ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக தனது 86வது வயதில் மும்பையில் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையில் CEO ஒருவர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததற்காக கடும் கண்டனங்களை சந்தித்துள்ளார். Paytm CEO விஜய் சேகர் சர்மாதான் தனது பதிவிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டவர் ஆவார்.
சர்ச்சைக்குள்ளான CEO
அவர் தனது எக்ஸ் தளத்தில், "அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர், இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். சல்யூட் சார், ஓகே டாடா பை பை" என கூறியிருந்தார்.
இந்த பதிவிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் சேகர் சர்மா சர்ச்சைக்குள்ளான தனது பதிவை நீக்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |