தத்து எடுக்கப்பட்ட டாடாவின் தந்தை... தலைசுற்றவைக்கும் குடும்பப் பின்னணி
நீ என்ன பெரிய பணக்காரனா என்று கேட்பதற்கு பதிலாக, நீ என்ன பெரியா டாட்டா பிர்லாவா என்று கேட்பது வழக்கம்.
அப்படி ஒரு பெயரின் பின்னணியில் இருக்கும் டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான ரத்தன் டாடா, நேற்று இரவு இயற்கை எய்திவிட்டார்!
ஆக, யார் இந்த டாடா? அவரது பின்னணி என்ன என்பது குறித்து படிக்கும்போது, பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவருகின்றன.
தத்து எடுக்கப்பட்ட டாடாவின் தந்தை...
டாடா என நாம் இப்போது அழைக்கும் ரத்தன் டாடா (Ratan Tata)வின் தந்தையான நாவல் டாடா (Naval Tata) ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிலிருந்து தத்து எடுக்கப்பட்டவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், டாடாவின் குடும்பப் பின்னணி, தலைசுற்றவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
டாடாவின் தந்தை பெயர் நாவல் டாடா. சூரத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த நாவல் டாடாவின் தந்தையான ஹோர்மூஸ்ஜி டாடா, டாடா குழும நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் தூரத்து உறவினர்களில் ஒருவர்.
தந்தை இறந்த சிறிது காலத்துக்குப் பின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார் நாவல் டாடா.
இந்த நாவல் டாடாவை, அதாவது, ரத்தன் டாடாவின் தந்தையான நாவல் டாடாவை, சர் ரத்தன்ஜி டாடா என்பவரின் மனைவியான நவாஜ்பாய் டாடா என்பவர், தங்களுக்கு பிள்ளைகள் இல்லாததால், தத்து எடுத்துள்ளார்.
இந்த சர் ரத்தன்ஜி டாடா, டாடா குழும நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் மகன் ஆவார். ஆக, டாடா குழும நிறுவனரான ஜாம்செட்ஜி டாடாவின் மருமகளான நவாஜ்பாய் டாடா, தற்போது மரணமடைந்துள்ள ரத்தன் டாடாவின் தந்தையான நாவல் டாடாவை தத்தெடுத்துள்ளார்.
அப்படித்தான் இவருக்கும் கோடீஸ்வர ரத்தன் டாடா குடும்பத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து, கோடீஸ்வரரான ஜாம்செட்ஜி டாடாவின் மருமகளான நவாஜ்பாய் டாடாவால் தத்தெடுக்கப்பட்ட நாவல் டாடாவின் மகன்தான் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவுக்கு 10 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் பிரிய, கோடீஸ்வர பாட்டியான நவாஜ்பாய் டாடாவே தன் பேரனையும் தத்து எடுத்து வளர்த்துள்ளார்.
டாடாவின் தந்தையான நாவல் டாடா, ’வறுமையின் வேதனையை அனுபவிக்க கடவுள் எனக்குத் தந்த கடவுளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன், அதுதான் பின்னாட்களில் எனது குணாதிசயங்களை மெருகேற்றியது’ என்று கூறியுள்ளார்.
தந்தையைப் போலவே தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால்தானோ என்னவோ, டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 66 சதவிகிதம், டாடா குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளிடம் உள்ளது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |